உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோதமான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தொல்பொருட்களை தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 சந்தேகநபர்கள் நேற்று (18) வியாழக்கிழமை தபகள்ள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தபகள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொல்லந்த பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தில் தப கள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வாரய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தப கள்ள, மரதன் கடவல, கிரான்பாஸ், மாத்தறை மற்றும் மீகலேவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

தபகள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

54 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0