உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

குடிகாரக் கணவனின் கொடூர செயல்!
மனைவி கத்தியால் குத்திக் கொலை!!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 42 வயதுடைய பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான 48 வயதுடைய கணவனுக்கும், உயிரிழந்த மனைவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்றைய தினமும் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்த கணவன், வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து மனைவியின் உடலின் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அயலவர்கள் வழங்கிய அவசரத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், கொலையாளி எனக் கருதப்படும் 48 வயதுடைய கணவனை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் கடுமையான மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0