உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க இன்றைய தினம் (18) வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் (2026) ஆம் ஆண்டில் 199 வீடுகளுக்கு 199 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ஏற்கனவே 101 வீடுகளின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக 98 வீடுகளுக்கு அனுமதி வழங்க பட்டுள்ள நிலையில் முதல் கட்ட நிதிக்கான காசோலைகள் வழங்குதல் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.

மன்னார், நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 98 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மடு பிரதேச செயலகத்திலும்,முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நானாட்டான் பிரதேசச் செயலகத்திலும்,மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மன்னார் பிரதேசச் செயலகத்திலும் வைத்து காசோலைகள் இன்று வியாழக்கிழமை (18) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் எம். ஹலீம் டீன், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ச.ஜெயக்குமார் மற்றும் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிலையான வீடமைப்பு வசதிகளை வழங்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0