உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர் கந்தையா பகீரதன்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீடமானது பிரதேசத்தை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை 2015ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் நடாத்துகிறது. இம்முறை பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2026 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு அரங்கில் வர்த்தக விவசாயத்திற்கான புத்திசாலித்தனமான தீர்வுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. “Smart Solutions for Commercial Agriculture” நடைபெறவுள்ளது.

இவ்வாராய்ச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இம்மாநாட்டின் நிறை அமர்வுப் பேச்சாளராக (Plenary Speaker) கனடா மனிட்டோபா பல்கலைக்கழகத்தின் மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் Ivan Oresnik, கலந்து சிறப்பிப்பதோடு. ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் வனவியல் பேராசிரியர் Toshiaki Owari திறவுகோல் உரையையும் ஆற்றவுள்ளனர்.

மேலும், இவ்வாராய்ச்சி மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விலங்கு விஞ்ஞானம் மற்றும் நீருயிரின வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர் தொழில்நுட்பவியல், மண், சூழல் மற்றும் நீர் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் போசணையும், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப்பொருள்களில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

இம்மாநாட்டிற்கு பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் எவ்வாறான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலர்வலய விவசாயத்தில் புகுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளது என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0