உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர, டிப்போவின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட ஹட்டன் டிப்போ, தற்போது நவீன வசதிகளுடன்கூடிய போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

டிப்போ வளாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், பேருந்துகள் பாதுகாப்பாக இயங்கக்கூடிய வகையில் பாதைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஊழியர்களுக்கான ஓய்வறைகள், தங்குமிட வசதிகள், சுகாதார தரநிலைகளுக்கு ஏற்ப கழிப்பறைகள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பொழுதுபோக்கு வசதிகளும் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், ஹட்டனிலிருந்து கொழும்பு உள்ளிட்ட தூர பிரதேசங்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர அறிவித்தார்.

இந்த புதிய சேவைகள் மூலம் மலையக மக்களின் போக்குவரத்து தேவைகள் மேலும் இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹட்டன் டிப்போவின் புனரமைப்பு பணிகள், அரசாங்கத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0