உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித எச்சங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“செம்மணி மனிதப் புதைகுழியில் மிகக் குறுகிய நாட்களுக்குள் 380 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியான மனிதப் பேரவலம் அரங்கேறிய ஒரேயொரு புதைகுழியாகவும், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நேரடிச் சாட்சியமாகவும் இந்தச் செம்மணித் தளம் இன்று மாறியுள்ளது.

இங்கு இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், உலகத்தினுடைய மனச்சாட்சியையே உலுக்கிக் கிளறிவிடுகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களமாக இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி அமையப் போகிறது.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தங்களின் மேலான கரிசனையைச் செலுத்த வேண்டும். எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்து, இன்றுவரை ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தருகின்ற ஓர் அணையாத சுடராகவும், தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு பிரதான திறவுகோலாகவும் இந்தச் செம்மணி அமைய வேண்டும் என்பதே எங்களின் பலத்த எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0