உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பகுதியில், சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடித்திரிவதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (17) காலை இரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் 27 வயதுடையவர், இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்தோடு சந்தேகநபரால் அவ்வாறு திருடப்பட்ட கைபேசி ஒன்று, 25 செப்புக் குழாய்கள் மற்றும் தங்கக் காப்பு ஒன்றை அடகு வைத்தமைக்கான ஆவணச் சீட்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0