உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணி புதைகுழி அகழ்வு; ஒரு எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இரும்புப் பொருள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வாய்வின் போது, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டு, முக்கிய சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் அமைந்துள்ள இப்புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போதே, தோண்டப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இந்த இரும்பு வடிவிலான பொருள் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பொருள் நுணுக்கமாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, இந்த வழக்கின் 120ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டது. பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அப்பொருள் நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் வளையல் ஒன்றும் தென்பட்டுள்ளது. எனினும், அது முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படவில்லை.

இன்று அந்த வளையலைச் சீரான முறையில் சுத்தம் செய்து, சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0