உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
19 பார்வைகள்

யாழ்ப்பாணம், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார்.

இதன்போது முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அவர்களும் இணைந்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் 2026ம் ஆண்டிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டினூடாக குறித்த பாடசாலையில் கழிவு முகாமைத்துவ தொட்டியுடன் பாதுக்காப்புக்கூரை அமைத்தல் மற்றும் கூட்டெரு தயாரித்தலுக்கான தொட்டி அமைத்தல் செயற்திட்டத்திற்காக ரூபா. இரண்டு இலட்சம் நிதியொதுக்கீடு மேற்கொண்டிருந்தார்.

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜயத்தின் போது கல்லூரியின் அதிபருடன் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியதுடன், பாடசாலையின் தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

9 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0