உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்


வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (Telecom) அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவது, கல்வி பயிலும் போதே வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல், தங்குமிட வசதிகள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போது தனது சேவையை மன்னார் மாவட்டத்திலும் விரிவுபடுத்தியுள்ளது.

குறித்த  நிகழ்வில் நிறுவனத்தின் இயக்குனர் மொலினி ஹரீந்திரன், மத குருமார்கள், பணியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு இந்த மையம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

28 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0