உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
21 பார்வைகள்

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பணியாளர்களினால் சேகரிக்கப்படும் நகரக் கழிவுகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடையில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறையில் இருக்கும் இக்காலகட்டத்தில், நகரசபை பணியாளர்கள் கைவண்டிகள் மூலம் கழிவுகளைக் கொண்டு வந்து, ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள டிக்கோயா ஓடைப் பகுதியில் கொட்டிச் செல்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளைத் தெருநாய்கள் இழுத்துச் சிதறடிப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பாரிய சூழல் மாசடைவும் ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக, இப்பாதையால் பயணிக்கும் பாதசாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

28 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0