உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார்.

தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்தில் 35 வயதுடைய ஆனந்தராஜ் நிதர்சன் எனும் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையில் பின்னர் உறவுகளுடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0