உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி குறித்த லொறியானது தரித்து நின்ற பட்டா மீது கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0