உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்து நேற்று இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கடந்த பொதுத்தேர்தல் காலங்களில் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர், நாடாளுமன்றத்துக்குத் தகுதியான ‘மலர்க்கன்றுகள்’ போன்ற புத்திஜீவிகளை அனுப்புமாறு மக்களிடம் கோரியிருந்தனர். ஆனால், தற்போது அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘களைப்பயிர்கள்’ என அவர்களே விமர்சிப்பது மக்களை அடியோடு ஏமாற்றும் செயலாகும்.

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசின் கீழ் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அரிசி இறக்குமதி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. இதனால் உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு முறையான விலையோ, சந்தை வாய்ப்போ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தந்திரோபாயமாக அரிசி கிலோ ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளனர்.

மேலும், சோளம், முட்டை போன்றவற்றுடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உப்பைக் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலை தற்போதைய அரசின் கீழ் ஏற்பட்டுள்ளது.

முற்காலத்தில் வீட்டில் என்ன தட்டுப்பாடு இருந்தாலும், உப்புக்கும் தேங்காய்க்கும் தட்டுப்பாடு வரக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், இன்று சமையலறையில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ உப்பின் விலை 300 முதல் 400 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக இருந்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை வெட்கக்கேடானது.

கடந்த நல்லாட்சி அரசு வீழ்வதற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டன. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் சில மாதங்களும் கடந்துள்ள நிலையிலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சப்பட்டு, அது குறித்துப் பேசுவதைக் கூட தவிர்த்து வருகின்றது.

திறமையற்ற மற்றும் அனுபவமற்ற ஒரு குழுவினரிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நாடு பேராபத்தை நோக்கிச் செல்வதையே தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0