உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலயத்தின் கடெற் மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் 2024 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் வகையில் ”கெப்டன்” (Captain) ஆக பதவி உயர்வு பெற்றுள்ள ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் கெப்டன் ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும் தேசிய கடெற் முகாமில் பங்குபற்றிய மாணவர்களும் சின்னம் சூட்டி சான்றிதழ் வழங்கி பாடசாலை சமூகத்தினாலும் கடெற் மாணவர்களின் பெற்றோர்களாலும் கௌரவிக்கப்பட்டார்கள்.

கடந்த 2025/10/24 ஆம் திகதி அன்று வெளியான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2460 மூலம் ஜனாதிபதி அவர்களின் அனுமதியுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் 2024 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் வகையில் ”கெப்டன்” (Captain) ஆக இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அவரோடு கடெற் மாணவர்களுக்கு பயிற்சியளித்த பொலிஸ் சார்ஜன் சுதர்சன் கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை கடற்பிரிவு மாணவன் ஏ.என்.சறாபத் இஸ்னி (Warrent officer – II) நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எம்.ஏ. கமறுன்னிஸா ஜே.வஹாப்தீன், உதவி அதிபர் எம்.ஐ.பழீலுள்ளா மற்றும் ஆசிரியர்களும் கடெற் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த விழாவினை அல்-ஹம்றா கடெற்பிரிவு சார்பாக ஓய்வு பெற்ற மருந்தாளர் எம்.சி.எம்.மஸ்கூத் தலைமை தாங்கி நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0