முதியவர் ஒருவரை காணவில்லை.!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் வசித்து வந்த கிட்ணன் சிவபெருமான் எனும் 55 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இவரை நேற்று 11 ஆம் திகதி மதியம் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அவரது மகன் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
அவரை தேடும் பணியில் ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது காலணி ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரை அருகில் கிடப்பதை கண்டு நேற்று மதியம் பெய்த மழையின் போது பாரிய வெள்ளம் பாய்ந்த வேலையில் வெள்ளத்தில் அடித்துச் சென்று இருக்கலாம் என சந்தேகம் கொண்டு தொழிலாளர்கள் மற்றும் மஸ்கெலியா பொலிசார் இணைந்து சாமிமலை ஓயாவில் தேடுதல் நடத்தி வருகின்றனர்.