கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜய வீதி பகுதியில், நேற்று (11) வியாழக்கிழமை மாலை சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1080 லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கம்பஹா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.