விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!
வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா – மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற உந்துருளி வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வவுனியாவில் இருந்து நெளுக்குளம் நோக்கிச் சென்ற கார் ஒன்றும் பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.