உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில்,”காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கான சுற்றாடல் சம்பந்தமான விழிப்புணர்வு விசேட உரையினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சுற்றாடல் பிரிவில் கடமையாற்றும் சமூக ஆர்வலர்  எம்.எம். சிபான் ஆற்றியிருந்ததுடன், ஆசிரியர்களுக்கான உறுதிமொழியினை ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி ஆசிரியரினால் வாசித்து  மொழியப்பட்டதுடன் பிரதேச செயலகத்தில் சுற்றாடல் பிரிவில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எஸ். சருன்னிஸா மற்றும் எம்.வை. றிஸ்மியா பேகம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

அத்துடன், மாணவர்களுக்கான உறுதிமொழி தரம் 11 ஐ சேர்ந்த மாணவத் தலைவர் ஐ.எல்.எம். இன்பாஸினால் வாசித்து மொழியப்பட்டதுடன் அவ்வுறுதிமொழி அனைத்து மாணவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில், பிரதியதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள்,  மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0