உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தீர்ப்பை அறிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிடுகையில்,
பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் முறைப்பாட்டாளர்கள் நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கும் இத்தகைய செயல்கள் வழிவகுத்துள்ளன என வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள், அந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கக் காரணமாக அமைகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இந்தப் பிரதிவாதிக்குத் தண்டனை விதிக்கும் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ் மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இக்குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களைத் ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான தண்டனையொன்றை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0