உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
67 பார்வைகள்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 03.06.2026 இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச் சின்னமாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரியிருந்தோம்.

குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் நினைவுச் சின்னமாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்திலும் அதேபோல தவறிழைப்பதற்கு இடமளிக்கமுடியாது என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.

இருப்பினும் வட்டுவாகல் பாலம் இடித்தழிப்புச் செய்கின்ற செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டின் நினைவுச்சின்னமாக வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை விட்டுவைக்குமாறு மக்களாலும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

எனவே வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒருபகுதி தமிழ் இனவழிப்பின் சாட்சியாக பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவும் கவனம் செலுத்தவேண்டும்.

இனவழிப்பின் சாட்சியமான பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை பேணிப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இந்தவிடயத்தில் கவனஞ் செலுத்தத் தவறினால் அவரும் சேர்ந்துதான் எமது தமிழ் இன அழிப்பின் சாட்சியத்தை அழிப்பதாக கருதவேண்டிவரும் – என்றார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க பதிலளிக்கையில்,

இது ஒரு மனிதாபிமானக் கோரிக்கையாகும். இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக பழைய பாலத்தை உடைக்காமல் விடுவதற்கு வாய்ப்பிருக்கின்றதா என்பதை பரிசீலிக்கவேண்டும்.

குறித்த பழைய வட்டுவாகல் பாலத்தை உடைக்காமல் விடுவதால் நீரோட்டம் தடைப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராயவேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நீரோட்டம் தடைப்படும் வகையில் பழையவட்டுவாகல் பாலத்தை விடுமாறு நாம் கோரவில்லை.

தொடக்கப்பகுதி அல்லது, முடிவிடத்தில் பாலப்குதியை நினைவுச்சின்னமாக விடுமாறே நாம் கோருகின்றோம்.

நிச்சயமாக வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணப்படவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

82 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0