உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள ‘உள்ளக விவகாரப் பிரிவுகளின்’ செயற்பாடுகள் மற்றும் ‘2025 – 2029 ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம்’ குறித்த விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் தற்போதைய செயற்பாடுகள் விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிறுவனங்களில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நேர்மையான நிர்வாகக் கலாச்சாரம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்கும் தற்போது எடுக்கப்பட்டுள்ள உத்திகள் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், பொது நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணி, இந்நிறுவனங்களில் தொடர்ந்தும் நேர்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எஸ். கே. லியனகம, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர். பி. எச். பெர்னாண்டோ, மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன உட்பட அந்தந்த நிறுவனங்களின் உள்ளக விவகாரப் பிரிவுகளின் பிரதானிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0