உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
38 பார்வைகள்

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதானதடையை உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது.

எனினும் பிரதி முதல்வர் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபை மற்றும் அதன் முதல்வர் ஆகிய தரப்பினரின் செயற்பாட்டுக்குத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் இன்று இரத்துச் செய்தது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபையும் அதன் முதல்வரும் செயற்படுவதற்குத் தடை விதிப்பதை விமர்சித்த உயர் நீதிமன்றம், பிரதி முதல்வர் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

பிரதி முதல்வர் அந்தப் பதவியை தான் துறக்கின்றார் என அறிவித்தால் அதை மாநகர சபையின் செயலாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்

வழக்கு நிலுவையில் இருக்கின்றது என்பதை காரணம் காட்டி அதை ஏற்காமல் விட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்தது.

வவுனியா மாநகர சபையின் பிரதி முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டமை தவறு என்று தெரிவித்து, தேசிய மக்கள் சக்தி தரப்பினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்த அந்த நீதிமன்றம் வவுனியா மாநகர சபை இயங்குவதற்கும், முதல்வர் எஸ்.காண்டீபன் மற்றும் பிரதி முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் அப்பதவிகளில் செயற்படுவதற்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

அதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில் வவுனியா மாநகர சபை மற்றும் முதல்வர் சார்பில் சட்டத்தரணி பெனிஸ்லர்ஸ் துஷானின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இன்று வாதங்களைச் சமர்ப்பித்தார்.

பிரதி முதல்வரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் முன்னிலையாகி வாதிட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்த தரப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ் இன்று உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.

இந்த மேன்முறையீடு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, கலாநிதி சோபித்த ராஜகருண, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.

எல்லா வாதங்களையும் கவனத்தில் எடுத்த உயர்நீதிமன்றம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையை நீண்ட காலம் முடக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு சபை தொடர்ந்து இயங்கவும், முதல்வர் தமது பதவியில் தொடரவும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் விலக்கியது.

எனினும் பிரதி முதல்வருக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரவும் உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

ஆயினும் அவர் தாமாகப் பதவியை துறந்தால் அந்தப் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு மாநகர சபையின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0