உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்; வெள்ளிக்கிழமை உரும்பிராயில் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
47 பார்வைகள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் இந்த ஈகைச்சுடரேற்றல் மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராகக் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய பொன். சிவகுமாரன், கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி உரும்பிராயில் வைத்து அப்போதைய ஸ்ரீலங்கா பொலிஸாரினால் கைது செய்யப்படவிருந்த தருணத்தில், தன்னுயிரை ஈகம் செய்யும் நோக்குடன் நஞ்சருந்தி வீரச்சாவடைந்தார்.

தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் வகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ‘பல்கலைக்கழக அனுமதி தரப்படுத்தல்’ முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய அவர், தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார். 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது நடத்தப்பட்ட படுகொலைகள் உட்பட, தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட அரச வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி, இளம் வயதிலேயே தனது உயிரைத் தியாகம் செய்தார்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாகவும், ஆயுத ரீதியிலான அடக்குமுறைகளுக்கு எதிரான துணிச்சலின் வடிவமாகவும் திகழும் தியாகி பொன். சிவகுமாரனின் தியாகத்தை நினைவுகூர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆண்டுதோறும் இந்நாளை உத்தியோகபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்குமாறு அரசியல் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அழைப்பு விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0