உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன.

ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் தலா 7 விடுதித் திட்டங்கள் மூலம் 2,200 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்படவுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2,000 மாணவர்களுக்காக 6 விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

கிழக்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களில் முறையே 1,600 மற்றும் 1,800 மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இவற்றுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர, வவுனியா, வயம்ப, யாழ்ப்பாணம், மொரட்டுவ, ருஹுண, கம்பஹா விக்ரமாராச்சி ஆகிய பல்கலைக்கழகங்களும் திருகோணமலை வளாகமும் புதிய விடுதி வசதிகளைப் பெறவுள்ள நிறுவனங்களுள் அடங்குகின்றன.

இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் தற்போது விலைமனுகோரல், மதிப்பீடு அல்லது கொள்முதல் கட்டங்களில் இருப்பதுடன், ருஹுண பல்கலைக்கழகம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0