உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 24 பேர் பலி!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்தப் புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

குறித்த இரு தினங்களில் பதிவான ஒட்டுமொத்த விபத்துக்களில் கடந்த 2 நாட்களில், 19 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

இவற்றில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 சேத விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய வாகனங்களில் உந்துருளிகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள் 15, முச்சக்கரவண்டிகள் 03, பாரவூர்திகள் 02, தனியார் பேருந்துகள் 02, கெப் ரக வாகனங்கள் 01 என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.

உயிரிழந்த 24 பேரில் அதிகளவானோர் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகள் என்பது விசேட அம்சமாகும்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் (நடந்து சென்றவர்கள்) 13 பேர், உந்துருளி ஓட்டுநர்கள் 07 பேர், உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்த பயணிகள் 01, மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர் 01 நபர், வாகன ஓட்டுநர்கள் 01, வாகனப் பயணிகள் 01 ஆவர்.

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும் போதும், வீதிகளில் பயணிக்கும் போதும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் எனப் பிரதி பொலிஸ் மா அதிபர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0