உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் முறையாக பயணச்சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தும் போது பல பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவிடப்படுவதாகவும் பயணிகளுக்கு முறையாக எஞ்சிய பணம் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் குறுந்தூர நெடுந்தூரம் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக நகர் பகுதியில் இருந்து கிராம தோட்ட பகுதியில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் பேருந்துகளில் நடத்துனராக பணியில் ஈடுபட்டு வரும் ஒரு சில பேருந்துகளில் முறையான நடத்துனர்கள் சேவையில் அமர்த்தப்படுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் அறவிடப்படுவதை தவிர்க்க கட்டாயம் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பயணச்சீட்டு வழங்காமல் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0