உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு உலக சந்தை நெருக்கடியே காரணம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான சவால்களின் காரணமாகவே, உள்நாட்டில் தற்காலிகமாக எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது இயற்கை பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான முடிவுகள் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின்போது, ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பில்லியன் கணக்கில் இழப்பீடுகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றமானது உள்நாட்டு நிர்வாகத் தவறு அல்ல. மாறாக, அது முற்றிலும் சர்வதேச காரணிகளால் உருவானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், உலக அளவில் எண்ணெய் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளன. இந்தச் சர்வதேச யுத்த சூழலானது இலங்கை போன்ற நாடுகளை மட்டுமன்றி இந்தியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளையும் கூட பாதித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்ட இந்தியாவே கடந்த சில வாரங்களில் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதுடன், இந்திய ரூபாவின் மதிப்பிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காப்புறுதிக் கட்டணங்களின் உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணிகளால், அரசுக்குக் கட்டுப்படுத்த முடியாத எல்லைக்கு அப்பால் இந்த விலை அதிகரிப்பு சென்றுள்ளது என்றும், இதனாலேயே எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய நேரிட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.

விலை அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், அரசு இன்னும் மக்களுக்குப் பெருமளவு மானியங்களை வழங்கி வருகின்றது என்றும் அசித நிரோஷன தெரிவித்தார். அதன்படி, டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவும் அரசு நட்டத்தைத் தாங்கி மானியமாக வழங்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும், அதன் 5ஆம் கட்டத் தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

“ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகால அடிப்படையில் ஸ்திரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் இந்தத் தற்காலிக விலை மாற்றங்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை.” – என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் மக்களுக்கு சாதகமான விலையில் எரிபொருளை வழங்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0