உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாற்று ஆலோசனைகளை ஏற்காவிடின் அரசை மக்கள் விரட்டியடிப்பர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்து, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், மக்கள் இந்த அரசை வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்குக் காத்திரமான மாற்றுத் திட்டங்களையும் ஆலோசனைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. எனினும், அரசு சுயநலப் போக்குடன் செயற்படுவதோடு, இந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி வருகின்றது.

அரசின் இத்தகைய தன்னிச்சையான போக்கினால் நாளாந்தம் பொதுமக்களே சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, இனியாவது எதிர்க்கட்சிகளின் நியாயமான ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரப் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின், மக்கள் பொறுமையிழந்து இந்த அரசை வீதிக்கு இறங்கி ஓட ஓட விரட்டியடிப்பது நிச்சயம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0