உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், சடலமாக மீட்கப்பட்டவரின் அடையாள விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

தோற்றம்: சுமார் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர்.

ஆடை: சிவப்பு நிற அரைக்கைச் சட்டை அணிந்துள்ளார்.

தலைமுடி: கறுப்பு மற்றும் வெள்ளை நிறக் கலப்பில் (நரைமுடி) சற்று நீளமாக வளர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

கடற்கரையில் சடலமொன்று கரை ஒதுங்கிக் கிடப்பதைக் கண்ட பிரதேசவாசிகள், அது குறித்துக் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அவசரத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்தவர் குறித்த ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனடியாகக் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0