உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களும் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் திருநெல்வேலி சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக வாகனங்கள் உச்செல்ல முடியாது என்பதனை மன வருத்தத்துடன் அறியத் தருகின்றேன் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி புனரமைப்பு பணிகளால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு குறித்த வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு பகல் நேரங்களில் வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்குவதனை தவிர்த்து இரவு நேரங்களில் பொருட்களை இறக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் குறித்த பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0