உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இன்று நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அவரது சிகிச்சைக்கான அவசர தேவைகள் மற்றும் நிதி ஆதரவு தொடர்பாக ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது

அத்துடன், மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகைப் பணமும் சுமந்திரனால் அவரிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சத்திரசிகிச்சைக்காக நிதியுதவி கோரியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தையும் சுமந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுக் கலந்துரையாடினார்.

இதன்போது, சிவாஜிலிங்கத்தின் மருத்துவச் செலவுகளுக்காகவும் ஒரு தொகைப் பணத்தை அவர் நிதியுதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0