சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு -15, மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 112 லீற்றர் (சுமார் 150 போத்தல்கள்) கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானங்களையும் அதிரடிப்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மஹபாகே பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.