மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29) தேர்த்திருவிழா இடம்பெற்றது.
9 ஆவது நாள் திருவிழாவான இன்று காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆசியாவின் மிகவும் பழமையானதும்,மிக பெரியதுமான சோமாஸ் கந்த மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பஞ்சரத தேரிலே உற்சவ மூர்த்திகள் ஆறோனிக்கப்பட்டதை தொடர்ந்து திருத்தேர் வீதி உலா இடம் பெற்றது.
குறித்த தேர் வீதி உலாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.








