உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதி கொடுக்கல் – வாங்கல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட ‘வழக்கு விசாரணைக்கு முந்தைய மாநாடு’ இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்தே, வழக்கின் அடுத்தகட்ட நகர்வாகப் பிரதான சாட்சி விசாரணைகளை ஜூலை மாதம் 7ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் கிரிஷ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருந்த பல கோடி ரூபா பெறுமதியான திட்டத்தின் போது, நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் அடுத்தகட்ட விசாரணைகள் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0