உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நியூசிலாந்தின் எதிர்க்கட்சிப் பேச்சாளரை நேரில் சந்தித்தார் விஜித ஹேரத்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளர் வானுஷி வோல்டர்ஸை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த உயர்நிலைச் சந்திப்பு குறித்துத் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு விவகாரங்கள் பலவற்றைப் பற்றி தாங்கள் இருவரும் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளரிடம் அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியுள்ளார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறைக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிதல் மற்றும் இலங்கையிலுள்ள பரந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

“நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினரான வானுஷி வோல்டர்ஸ் தனது இலங்கை பூர்வீகம் குறித்தும், தற்போதைய சூழலில் நியூசிலாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்கள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் முக்கிய பங்களிப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்” என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0