உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் கார் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

களுத்துறை, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கார் களுத்துறை, தெபுவான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த தகவலின்படி குறித்த கார், தெபுவான, நெபட பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு அருகில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறையின் வெட்டுமக்கடை பகுதியில் இன்று காலை (28) இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.

காரில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாதிக்கப்பட்டவர், களுத்துறை நகோட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0