உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மயங்கிய நிலையில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி இன்று காலை மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு நகரின் ‘சின்ன ஆஸ்பத்திரி’ முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து தனது வாகனத்தைச் செலுத்தி வருகிறார்.

சம்பவதினமான நேற்று (27) பிற்பகல் 3:00 மணியளவில் வீடு சென்று மதிய உணவை உட்கொண்ட அவர், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

இரவு 7:00 மணியளவில் இடியாப்பம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குக் கைபேசி மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு நகரின் முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலிருந்து நபர் ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக இவரது முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

எனினும், இரவு 11:00 மணியாகியும் சாரதி வீடு திரும்பாததாலும், அவரது கைபேசி வேலை செய்யாததாலும் பதற்றமடைந்த உறவினர்கள், அவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (28) காலை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று அநாதரவாக நிற்பதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

அருகில் சென்று பார்த்தபோது, அதற்குள் சாரதி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக வாழைச்சேனை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மயக்கமுற்றுக் கிடந்த சாரதியை மீட்டு அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கொள்ளையர்கள் திட்டமிட்டபடி முச்சக்கரவண்டியை வாழைச்சேனை நோக்கி வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளனர்.

வழியில் வைத்துச் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவர் சுயநினைவை இழந்ததும் அவரிடமிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், பணம், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைச் சூறையாடிக்கொண்டு, அவரை காட்டுப் பகுதியிலேயே கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து கூட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0