களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!
களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு, மரிக்கார் வீதியைச் சேர்ந்த முகமது சாபிக் என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.