உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அப்போது மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் தீவைக்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஜே.வி.பி.தான்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு ஆளுங்கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் ஆரம்பகால அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமைகளுக்குத் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் மக்கள் விடுதலை முன்னணியினரே முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, புனித தலதா மாளிகை மீது முதலாவதாகத் தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் கடந்த 1989 ஆம் ஆண்டு முதன்முதலில் தலதா மாளிகை மீது ஆயுதத் தாக்குதலை நடத்தியிருந்தது.

அந்தப் பீதி நிலவிய காலகட்டத்தில், மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.வி.பி. நாடு முழுவதும் அரச சொத்துக்களுக்குத் தீவைக்கும் பேரழிவுச் சம்பவங்களில் ஈடுபட்டது. இவர்களது வன்முறைக் கலாச்சாரத்தினால் அன்றைய காலகட்டத்திலேயே அரசுக்கு 288 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பாரிய நிதி இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீ வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ஜே.வி.பி. தான், இன்று மேடைகளில் ஏறி நின்று கடந்த 75 ஆண்டுகாலப் பாரம்பரிய அரசியல் ஆட்சியை ‘நாட்டின் சாபம்’ என்று தம்பட்டம் அடிக்கின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து, உண்மையில் யார் இந்த நாட்டுக்குச் சாபமாகச் செயற்பட்டார்கள் என்ற உண்மையை இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் எமது அரசியல் பயணத்தில் கட்சிகளைத்தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினரோ அதிகாரத்துக்காகத் தங்களது அடிப்படைக் கொள்கையையே முற்றாக மாற்றியுள்ளார்கள். அன்று மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய மக்கள் விடுதலை முன்னணி, இன்று தாங்கள் ஆட்சியில் இருந்துகொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்து, அதனைத் தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது.” – என்று ராஜித சேனாரத்ன மேலும் சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0