பெருமளவான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாபுத்கமுவ பகுதியில், நேற்று புதன்கிழமை (27) பெருமளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 101 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.