உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிரணித் தலைவர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே எதிரணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடத்தப்படமாட்டாது என ஆளுங்கட்சியான ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் அண்மையில் அறிவித்திருந்தார். அரச தரப்பின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்தே, மாகாண சபைத் தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்தியே தீர வேண்டும் என வலியுறுத்தி எதிரணித் தலைவர்கள் இக்கூட்டணியை அமைத்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த எதிரணித் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தடையாக இருக்கும் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், புதிய தேர்தல் முறைமையில் சட்டச் சிக்கல்கள் நீடிக்குமாயின், காலதாமதங்களைத் தவிர்ப்பதற்காகப் பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலாவது மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நீண்டகாலமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கியுள்ள மாகாண சபைகளுக்குத் தேர்தல்களை நடத்துவதன் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

45 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0