உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம்,

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது  எனக் குறிப்பிட்டார்.

ஆனால் அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவால் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும் மதத்தின் பெயரால் சட்டத்தை மலினப்படுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ யாரும் முயற்சிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

மேலும், தெற்கை பொருத்தவரையில் இந்த சிறுமியின் விவகாரத்தை திசை திருப்பவும்  பௌத்த துறவி சம்பந்தப்பட்டதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  சமூக மட்ட அமைப்புக்கள் குரல் கொடுக்க முன்வராமை கவலை அளிக்கிறது.

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான அநீதியாக இந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் பார்க்கின்ற நிலையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0