யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்ப்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடற்ப்பரப்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்ப்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரை திரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடும் தேடுதல் மேற்கொண்டும் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்படாதிருந்த நிலையில் இன்று புங்குடுதீவு 3 ஆம் வட்டார கடற்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருந்தது.
இந்த நிலையில் காணாமல் போன தொழிலாளியின் உறவினர் ஒருவரால் சடலம் அடையாளம் காட்டப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

