உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபை தவிசாளருக்கும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த ஒலிப்பதிவை தவிசாளரே பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய வட்சப் குழுவொன்றில் பகிர்ந்ததாகவும், பின்னர் அது உறுப்பினர்கள் மூலம் ஊடகவியலாளர்களிடம் சென்றதாகவும் தெரியவருகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.

அத்துடன், செயலாளர் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கும், அவர் சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதேசத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டமைக்காக  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர்  ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸாரின் அழைப்பை ஏற்று இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, முறைப்பாட்டாளரான கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரையும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தான் தற்போது கொழும்பில் இருப்பதால் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாது என தவிசாளர் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 29.05.2026 அன்று காலை 10 மணிக்கு இருதரப்பினரையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0