உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிளிநொச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பதின்ம  வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு  கிளிநொச்சி மேல் நீதிமன்றம்  பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி  மாதம் 19 ஆம் திகதி பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணவிற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் கீழ் பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி   மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் யாழ்ப்பாணம்  மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தன.

குறித்த வழக்கின்  விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்   இன்றைய தினம் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில்  குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச் சாட்டுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச் சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது

அத்துடன்   பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து  இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரன சிறைத்தண்டனையும்

அத்துடன் முதலாவது குற்றச் சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனையும்

இரண்டாம் குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0