உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாய்ந்தமருது தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில் வுழு நீர்த் தொகுதி திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

சமூகத்தின் ஆன்மீக மற்றும் அடிப்படை தேவைகளை ஆழமாக உணர்ந்து, மனிதநேய சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வுழு நீர்த் தொகுதி புனித அரஃபா தினத்தை முன்னிட்டு சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், மாணவிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இவ் வுழு நீர்த் தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளித்தார்.

தினந்தோறும் தொழுகை வழிபாடுகளுக்காக வுழு செய்யும் மாணவிகளுக்கு சுத்தமானதும் சௌகரியமானதுமான நீர் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், கல்வி மற்றும் மார்க்கச் சூழலை மேலும் சிறப்புறச் செய்யும் அரிய சமூக நலச் சேவையாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக மாணவிகளின் சுகாதாரம், ஒழுக்கம், ஆன்மீகத் தூய்மை மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்நீர் தொகுதி, அரபுக் கல்லூரியின் வளர்ச்சியில் மறக்கமுடியாத பங்களிப்பாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் அரபுக் கல்லூரியின் அதிபர் ஆதம்பாவா மௌலவி, நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

“மக்களின் தேவையே எமது சேவையின் நோக்கம்” என்ற உயரிய எண்ணத்துடன் செயல்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், கல்வி, சமூக நலன், மார்க்க சேவை மற்றும் மனிதாபிமான பணிகள் வழியாக சமூக முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் உறுதியான பங்களிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0