உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நன்னீர் இறால் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

நாட்டின் நன்னீர் இறால் தொழில்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக வருமானம் தரும் ஒரு வணிகத்துறையாக மாற்றுவதற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ், பாரம்பரிய முறைகளை மாற்றி, தீவின் பிரதான நீர்த்தேக்கங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய தொழில்நுட்ப வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இறால் குஞ்சுகளை (Post-larvae) நேரடியாக நீர்த்தேக்கங்களில் விடுவிப்பதற்குப் பதிலாக, “கூடு முறை” (Cage system) மூலம் ஒருமாத காலம் பூர்வாங்க வளர்ச்சியைப் பெறச்செய்து விடுவிப்பதால், இதற்கு முன்னர் ஒரு கிலோ இறாலைப் பெறுவதற்கு 300-400 குஞ்சுகள் தேவைப்பட்ட போதிலும், தற்போது அது 100 வளர்ந்த இறால் குஞ்சுகள் வரை குறைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டமானது முதல் கட்டமாக நாட்டின் ஐந்து இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. கிரித்தலே வாவி, அநுராதபுர மாவட்டத்தின் இரண்டு குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் இரண்டு குளங்களை மையமாகக் கொண்டு இத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு மற்றும் அக்கராயன் குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புது முறிப்பு குளத்தில் கூடு மூலம் வளர்க்கப்பட்ட இறால் குஞ்சுகள் குளத்தில் இன்று விடப்பட்டன. தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர் அஜித் சிறிகுமார கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், நீர் உயிரினச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் ம.மதுசன், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0