சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
ராகம பகுதியில் வைத்து 112 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்புவா வெவ வீதிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படை அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது 150 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 112 லீற்றர் சட்டவிரோத மதுபானத்தை கைப்பற்றியிருந்தனர்.
குறித்த போத்தல்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் கந்தானை, நாகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.