உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். மாவட்டத்தில் காணிகளை விடுவிக்க இராணுவம் பின்னடிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
47 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஏனைய மாவட்டங்களில் சில காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் ஓரளவு இணக்கம் தெரிவித்த போதிலும் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளில் கணிசமானவற்றை விடுவிப்பதற்கு இராணுவம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதன்படி, பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியில், காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான வீதியை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கடற்படை முகாம் உள்ளது என்று கோரியே அந்த வீதி விடுவிப்புக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலயம், பலாலி இராணுவ மருத்துவமனை, பலாலி கொமாண்டோ பங்களா ஆகியவற்றை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இராணுவத்தால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

‘பரிசீலனை செய்யப்படும்’ என்ற வாக்குறுதிகூட இந்தக் காணிகள் தொடர்பில் வழங்கப்படவில்லை.

வயாவிளானில் உள்ள சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயம், தல்சவனவுக்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவின் பாதை, பலாலி சந்திப் பகுதியில் உள்ள சந்தை உள்ளிட்டவற்றை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இராணுவம் சாதகமாகப் பதிலளித்துள்ளது. எனினும், உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0